யசூசி அக்காசி இன்று இலங்கை வருகிறார்
ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அக்காசி இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை பரிந்துரை அமுலாக்கம் மற்றும் தேசிய செயற்திட்டம் ஆகியன தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ள அக்காசி இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
இந்தவார இறுதி வரையில் அக்காசி இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் எதிர்க்கட்சி அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோருடன் அக்காசி பேச்சுவார்த்தை நடத்துவார் என குறிப்பிடப்படுகிறது.
தேசிய நல்லிணக்கத்தின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்காசி வட மாகாணத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட உள்ளார்.
இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் அக்காசி மேற்கொள்ளும் 22ம் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply