தயாசிரியை ஒழுக்காற்று குழுவிடம் முன்னிலையாகும்படி பணிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவை கட்சியின் ஒழுக்காற்று குழுவிடம் முன்னிலையாகும்படி பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு, ஒழுக்காற்றுக் குழு முன்னிலையில் முன்னிலையாகும்படி தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில், கட்சிக்கான முக்கியமான பதவிகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் உட்பட எட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து அவரிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர அண்மையில் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திய மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் ஒழுக்காற்றுக் குழுவிடம் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கமைய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால், பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே அந்த அறிக்கை தொடர்பான விளக்கங்கள் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் இப்படியான கருத்து வெளிப்பாடு காரணமாக எதிர்வரும் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையே விரிசல்கள் தோன்றியுள்ளதுடன் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply