கிளிநொச்சியில் வரட்சி அகோரம்! காசு கொடுத்து தண்ணி வாங்கும் நிலை
தற்போது கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.
குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.
குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது மக்கள் தங்களது அன்றாட அனைத்து நீர்த்தேவைகளுக்காகவும் நீரினை பணம் கொடுத்தே பெற்று வருகின்றனர்.
பூநகரி பிரதேச சபையினரும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது எல்லா பிரதேசங்களையும் சென்றடையவில்லை என்பதோடு மக்களின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானதாகவும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க முழங்காவில் பிரதேசத்திலும் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் முழங்காவில் பிரதேசததில் உள்ள ஒரு குழாய் கிணற்றிலிருந்து கடற்படையினர் நாளாந்தம் பாரிய நீர்த்தாங்கிகள் மூலம், இலட்சக்கணக்கான நீரை முழங்காவில் பிரதேசத்திற்கு அருகில் உள்ள பிரதான கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இந்த குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினரால் பெறப்படும் நீர் நாளாந்தம் இராணுவத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை முகாமிலுள்ள நிச்சல் தடாகத்தினை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் நிலத்தடி நீர் விரைவாக குறைவடைவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது.
முழங்காவில் பிரதேசத்தினை சுற்றியுள்ள பிரதேசங்களின் நீர் நிலைகள் இவ்வாறு உவர் நீராக மாறியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி தவிக்கும் நிலையில் குளிப்பதற்கு நாளாந்தம் பெருமளவு நீர் எடுத்துச்செல்லப்படுவது நியாயமற்ற செயலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply