யுத்தத்தின் போது காணாமற் போனவர்கள் தொடர்பில் ஆராய விசெட குழு
யுத்தகாலத்தின் போது யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவினர் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் குறிப்பிட்டார்.
´யுத்த காலப் பகுதியில் பெருமளவானவர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
அதிலும் 2006ஆம் ஆண்டில் காணாமல் போயுள்ளது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
2006 ஆண்டு மட்டும் 468 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதில் 128பேர் மீண்டும் திரும்பி வந்துள்ளதாகவும் முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல்போன 196 பேரின் நிலமை என்ன என்பது இன்றுவரை தெரியாமல் உள்ளது.
இவர்களின் நிலை பற்றி ஆராய்வதற்கு இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் விசேட குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply