அனைத்து பல்கலைக்கழகங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு
மருத்துவ பீடங்களைத் தவிர்ந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் பல்வேறு மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பல்கலைக்கழகங்கள் இந்த நடவடிக்கையுடன் இணையவில்லை என்ற போதிலும் தற்போதைய நிலைமையின் கீழ் பல்கலைக்கழக கட்டமைப்பு உண்மையிலேயே செயற்படுகின்றதா இல்லையா என்பது தெளிவில்லாது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை எதிர்காலத்தில் பாரதூரமாவதைத் தடுக்கும் வகையில் உடனடியாக செயற்பட வேண்டும் என நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply