அகதிகள் தொடர்பிலான அவுஸ்திரேலியாவின் புதிய தீர்மானத்திற்கு விமர்சனம்
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை பசுபிக் தீவுகளுக்கு அனுப்பும் அந்த நாட்டு அரசாங்கத்தின் தீர்மானம், பிராந்தியத்தில் அடைக்கலம் கோருவோர் மற்றும் அகதிகள் தொடர்பிலான பிரச்சினையை மறைக்கவே உதவும் என்று மனித உரிமைகள் நடவடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த புதிய திட்டத்தின்படி நாட்டுக்கு வரும் அகதிகள் நௌரு தீவுக்கு பல வருடங்களாக தங்கவைக்கப்படவுள்ளனர். அதேவேளை அகதிகளுக்கு அந்த தீவு பாதுகாப்பானதாக அமையமாட்டாது.
அத்துடன் அகதிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வைக்காணும் முயற்சிகளை அவுஸ்திரேலியாவின் புதிய திட்டம் செயழிலக்கச்செய்து விடும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் மெல்போன் அலுவலக இணைப்பாளர் எலெக்ஸ் பக்லியாரோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தீவுகளுக்கு அனுப்புவது மனித உரிமைகளை மீறும் செயல் என்று அந்த நாட்டின் அகதிகளுக்கான சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து அகதிகள் நாட்டுக்கு வருவதை தடுப்பதற்காக கடந்த ஜூன் 28 ஆம் திகதியன்று அவுஸ்திரேலிய அரசாங்கம் மூன்று பேரைக்கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தது. இந்தக்குழு அண்மையில் தமது 22 பரிந்துரைகளை வெளியிட்டது.
அதில்இ பப்புவா நியுகினியாவில் உள்ள நௌரூ மற்றும் மானஸ் தீவுகளின் அகதிகளை பராமரிப்பு நிலையங்களை திறக்கவேண்டும் என்ற பரிந்துரையும் அடங்கியிருந்தது. இந்த நிலையங்கள் 2007 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply