வலிகாமத்தில் திறக்கப்படவிருந்த புதிய பிரதேசசபையின் கட்டித்தின் மீது கழிவு எண்ணெய் வீச்சு
இன்று காலை திறக்கப்படவிருந்த வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேசசபையின் புதியகட்டித்தின் மீது ஆயுதம் தாங்கியகுழுவினர் துப்பாக்கிமுனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளார்கள்.
அதிகாலை 2.00 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்தகும்பல் இந்த அநாகரிகச் செயலை அரங்கேற்றியுள்ளது.
அதிகாலைவேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப் பாயந்து காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்னர்.
அவர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி கை, கால்கள் மற்றும் முகத்தையும் கட்டியதுடன் அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாளஅட்டைகளையும் பறித்தெடுத்டித்தனர்.
அத்துடன் காவலாளின் தலையில் கழிவு ஒயிலினை ஊற்றி அசிங்கப்படுத்தி, கடுமையாகதாக்கிவிட்டு புதிதாககட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்த பிரதேச சபை கட்டடத்திற்கும் கழிவு எண்ணெய்யை பரவலாக ஊற்றிவிட்டு அங்கிருந்து விசமிகள் தப்பிச்சென்றுள்ளார்கள்.
சம்பவத்தை நடத்திவிட்டு விசமிகள் கை கால்கள் கட்டப்பட்ட காவலாளிகளை கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ளபற்றைகளுக்குள் வீசிவிட்டுமாயமாகினர்.
பின்னர் காவலாளி ஒருவர் தனதுகட்டுக்களை அகற்றிபற்றைக்குள் இருந்து மீண்டநிலையில் மற்றைய காவலாளியையும் மீட்டுள்ளார்.
இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டிற்க்குச் சென்று அவர்களின் தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேசசபைத் தலைவருக்கு சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்குவந்த பிதேசசபைத் தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இதனைஅடுத்து சுன்னாகம் பொலிசார் காவலாளிகளை அழைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதேவேளை, குறிப்பிட்ட கட்டடத்தை உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு வடமாகாண ஆணையாளர் பணித்திருந்ததாகவும் இந்தநிலையில் கடந்த புதன் கிழமை கட்டடத்தைகையேற்பதற்கு உள்ளுராட்சி உதவிஆணையாளர் வந்தபோது, வலிதெற்கு பிரதேசசபைத்தலைவர் கட்டடம் தங்களிடமே ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தியதற்கமைய ஒப்பந்தகாரர்களால் செயலக்கட்டிடம் அவரிடமேகயளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தவிசாளருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளரருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாகவும் அதன் போது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், தமக்குஆளுனர் படைகளின் பாதுகாப்புவழங்கியுள்ளார்.
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் எனக்கூறிவலி. தெற்குபிரதேசசபை தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.
இந்தநிலையிலேயே புதிதாக திறக்கப்படவிருந்த கட்டடத்திற்கு இனந்தெரியாத ஆயுத்தாரிகள் கழிவுஒயில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply