இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2012 ஆம் ஆண்டில் 6 தசம் 7 சதவீதமென சர்வதேச நாணய நிதியத்தினால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி குறைவானது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்த அதேவேளை, 2011 ஆம் ஆண்டு 8 தசம் 3 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்திருந்தது.

இலங்கை மத்திய வங்கி 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை எதிர்பார்த்த போதிலும் 6 தசம் எட்டு சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி உயரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் பணவீக்கம் இந்த வருட இறுதியில் 10 தசம் ஒரு சதவீதத்தினால் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் அயல்நாடான இந்தியா உட்பட ஏனைய ஆசிய நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட விபரங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply