நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் தாக்குதலின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள்

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே செயற்பட்டுள்ளதாக ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் இனவாதக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டுகின்றார்.
அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், ஜானக பெரேரா கொல்லப்பட்ட போதும் அரசின் மீது பழிபோடப்பட்டதாகவும்இ பின்னர் புலிகளே அவர்களைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதபோல் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார்? செயற்பட்டார்கள் என்பதும் எதிர்காலத்தில் நிரூபணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய கருத்துக்கள் இவ்வாறு அமைந்திருந்தது.

அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த விடயம் நன்கு புரியும். தெரியாதவர்களுக்கு ஒன்றும் புரியாது. அதாவது பல்கலைகழக விரிவுரையாளர்களின் பிரச்சினையின் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்களே செயற்படுகின்றன. அவ்வாறு அரசசார்பற்ற நிறுவனங்கள் தலைமை வகிக்கின்ற போராட்டங்கள் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே நடைபெறும். அதனைப் புரிந்து கொள்வதற்கு விசேட ஞானம் தேவையில்லை.

20-20 கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையில் நடைபெறும் போது, சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் நிலைகொண்டிருக்கின்ற நிலையில் ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தி சர்வதேச ரீதியிலான ஒரு செய்தியை தோற்றுவிக்கும் அவசியம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றனவா? என யாருக்கும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply