ஆனைமடு ஹோட்டல் ஒன்றின் மீது கைகுண்டு தாக்குதல்
புத்தளம், ஆனைமடு பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கைகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (12) இரவு இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜெயக்கொடி தெரிவித்தார். இத்தாக்குதலில் எவருக்கும் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
கைக்குண்டு தாக்குதலினால் ஹோட்டலின் கண்ணாடிகள் மட்டும் உடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தாக்குதல் இடம்பெற்ற ஹோட்டலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்று இன்று (13) இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தினை தடுப்பதற்கு அக்கட்சியின் பிறிதொரு குழுவால் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply