அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – யுனிசெப்

நாட்டில் உள்ள சிறார்களின் நெருக்கடிகளை நிவர்த்திற்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சில செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலய பணிப்பாளர் கெரீன் ஹல்ஷொப, நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை மக்களுக்கு சிறந்த சுகாதார நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், சிறார்களுக்கான போஷாக்கின்மையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்பொருட்டு தமது அமைப்பும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுனிசெப்பின் தெற்காசிய பணிப்பாளர், தற்போது தெற்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறார்களுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் சுகாதார முன்னெடுப்புகளை ஆராயும் விதமான விஜயங்களை மேற்கொண்டு வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply