மத்திய அமைச்சரவை மாற்றம்! தமிழகத்துக்கு அமைச்சுப் பதவி இல்லை

இந்திய மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த மாற்றத்தின் போது தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் பதவி கிடைக்கவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணிக்தாகூர், மீனாட்சி நடராஜனுக்கு ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கருதப்பட்ட போதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கும் அந்த வாய்ப்பு இன்று கிடைக்கவில்லை.

ஆந்திரா மாநிலம் அறுவரை அமைச்சர்களாக பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மூவர் அமைச்சர்களாகியுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

கர்நாடகா, குஜராத், டெல்லி, உத்தரகாண்ட், மராட்டியம், அசாம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர்களாகியுள்ளனர்.

மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று புதிதாக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ள 22 அமைச்சர்களில் 4 பேர் பெண்களாவர்;. அவர்களில் சந்த்ரேஷ்குமாரி மட்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பொறுப்பை ஏற்றுள்ளார்.

ராணி நாரா, தீபா தாஸ்முன்ஷி, கிருபாராணி கில்லி ஆகிய மூவரும் இணை மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர். இவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபா தாஸ்முன்ஷிஇ முன்னாள் மத்திய மந்திரி பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியின் மனைவி ஆவார். இவர் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பெண்களில் ஆந்திராவை சேர்ந்த கிருபாராணி சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். கிருபாராணியை சமீபத்தில் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அதன்பிறகு கிருபாராணி ராகுலின் ஆதரவாளராக மாறினார். அதற்கு பரிசாக கிருபா ராணிக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்துள்ளது என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply