அமெரிக்காவில் சூறாவளி காரணமாக 60 பேர் பலி: 6 கோடி மக்கள் பாதிப்பு

அமெரிக்காவில் நிலைகொண்டுள்ள ‘சண்டி’ சூறாவளியால் இதுவரையில் 60 பேர் பலியானதுடன, 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சூறாவளியால் பல குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதுடன், மரங்கள் முறிந்து வீடுகளிலும் மின்கம்பங்களிலும் வீழ்ந்துள்ளன. இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள இரு வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சி நிரல்களை மாற்றியமைத்துள்ளனர்.

‘சண்டி’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை நிவர்த்திசெய்வதற்கு பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிப்பதுடன், கரீபியன் கடலிலிருந்து மணிக்கு சுமார் 75 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவை அண்டிய கரீபியன்; கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சண்டி புயல் உருவானதால், கரீபியன் கடல் பகுதியிலுள்ள ஜமைக்கா, கியூபா நாடுகளில் சூறாவளியுடன் கூடிய கடும் மழை பெய்துவருகிறது.

‘சண்டி’ சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா, மேரிலாண்ட் மாகாணங்களை தாக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இம்மாகாணங்களில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இச்சூறாவளி இன்னும் சில மாநிலங்களில் தாக்கக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ இச்சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டு அவசரகால நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply