ஈரானிலிருந்து எரிபொருளைக் இறக்குமதி செய்வது நீண்ட காலத்துக்கு சாத்தியமாகாது!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்காக மாற்றுத் தரப்பினருடன் ஒப்பந்தகளைச் செய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து எரிபொருளைக் இறக்குமதி செய்வது நீண்ட காலத்துக்கு சாத்தியமாகாது.
இதனையடுத்தே மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பல தரப்பினரிடமிருந்தும் கேள்வி கோரப்பட்டுள்ளது. அதனால், எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை என்பதுடன் நீண்டகால தயார்ப்படுத்தலின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டு எதிர்காலத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply