விடுதலைப் புலி உறுப்பினர்களிடமிருந் வெடிபொருட்கள் மீட்பு!
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடமிருந் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் புலிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி ஜெயின் தலைமையிலான குழுவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். எனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, புலிகளுக்கு எதிரான தடைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செயற்படவில்லை எனவும், இவ்வாறான ஓர் பின்னணியில் புலிகளுக்கு எதிரான தடையை தொடர்ச்சியாக நீட்டிப்பது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1994ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தடை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புலிகளுக்கு எதிரான தடையை கடந்த ஜூலை மாதம் இந்திய மத்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. இந்த தடை உத்தரவிற்கு எதிராக தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் மேன்முறையீட்டு செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply