முல்லைத்தீவு கடற்பரப்பில் புயல் காற்று

முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து புயல் காற்றாக மாறுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இப் புயல் காற்று கிழக்குத் திசையிலிருந்து மேற்குத் திசை நோக்கி நகர்வதாக காலநிலை அவதான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக கிருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசத்தில் கடலை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்கும் படி அவ்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply