வடக்கு கிழக்கு கரையோர பிரதேசங்களில் சூறாவளி அச்சுறுத்தல்
திருகோணமலை, குச்சவெளியிலிருந்து யாழ்ப்பாணம் வரையான கரையோரப் பிரதேசங்களில் சுமார் 500 மீற்றர் கடல் எல்லைக்குள் குடியிருக்கும் பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள சுறாவளி, நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கைக்குள் உட்புக வாய்ப்புள்ளதால் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி மக்களை அப்பகுதிகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் சற்று நேரத்துக்கு முன்னர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply