கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க ரகசிய ஒப்பந்தம்!
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணு உலை எதிர்ப்பார்ளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று திங்கட்கிழமை,சென்னையில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்துக்கு ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிஇ நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உட்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply