விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு ஏற்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டுமெனக் கோரி இந்திய தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட சத்தியக் கடதாசி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே.ஜெய் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்த தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
தீர்ப்பாயத்தில் சாட்சியம் அளித்த கியூ பிரிவு பொலிஸ் அதிகாரிகளான திருச்சி ராஜீவ்காந்தி, விழுப்புரம் ராஜ்பாபு, சென்னை சாந்தன் ஆகியோரிடம் நீதிபதி ஜெய் விசாரணைகளை நடத்தினர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறப்படும் சுவிஸ்ஸர்லாந்தைச் சேர்ந்த சிவநேசன் சார்பில் வழக்குறைஞர் ராதாகிருஷ்ணன் தீர்ப்பாயத்தில் செய்த மனுவை ஏற்பதா? வேண்டாமா? என்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, சிவநேசன் விடுதலை புலிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவரது வழக்குறைஞர் ராதாகிருஷ்ணன், தான் விடுதலைபுலி உறுப்பினர் என்றும், ஆணையத்தை நாடுபவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், சிவநேசன் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்க மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார்.
அதேபோல், இந்த தீர்ப்பாயமும் சிவநேசனின் மனுவை ஏற்க வேண்டும் என வாதிட்டார். பின்னர் நீதிபதி ஜெய்இ சிவநேசனின் மனுவை ஏற்பதாக அறிவித்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட வழக்குறைஞர் ராதாகிருஷ்ணன், ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply