இலங்கையின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கவனம்
இலங்கை, இந்தியாவுக்கு எதிராக அரசியல் மற்றும் பொருளாதார போரை முன்னெடுத்து வருவதாகவும் இது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் கடும் கவனத்தை செலுத்தி வருவதாகவும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த அதிகாரி இதனை கூறியுள்ளார்.
இலங்கை, இந்தியாவுடன் பொருளாதர உறவுகளை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு தடையேற்படுத்தி வருகிறது எனவும் குறிப்பாக இந்தியாவின் சிறிய ரக மோட்டார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கும் கடுமையான வரி கொள்கை இந்திய வர்த்தகர்களின் அதிருப்தியடைய செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply