வடக்கையும் தெற்கையும் இணைக்கும் புகையிரத பாதை துரித கதியில் அமைப்பு

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வடபகுதி புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.   ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் முதல் கட்டப்பணியும், மாங்குளத்திலிருந்து பளை வரையும் இரண்டாவது கட்ட பணியும், பளையிலிருந்து காங்கேசன்துறை வரை மூன்றாவது கட்ட பணிகளுமாக புகையிரத பாதையின் நிர்மாண பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை துரிதமாக பூர்த்தி செய்து காங்கேசன்துறை வரையில் விரைவாக புகையிரத சேவையை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புகையிரத பாதையில் வளைவுகள் உள்ள பகுதிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஓமந்தையிலிருந்து பளை வரை மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரதத்தை சேவையில் ஈடுபடுத்த முடியுமென ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply