50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்
அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று (18) நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து இன்று குறித்த இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 282 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் சில படகுகளில் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் எவரையும் புகலிடக் கோரிக்கையாளர்களாக கருத முடியாது எனவும், இதனால் குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தடையில்லை எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார்.
உரிய பயண ஆவணங்கள் இன்றி குறித்த நபர்கள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வ அடிப்படையிலும் பலவந்தமான முறையிலும் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 380 என கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply