2009இல் இலங்கையின் நடவடிக்கை தொடர்பில் ஆராய ஐநா மதிப்பாய்வு குழு அமைக்கிறது
ஐக்கிய நாடுகள் சபையானது துணை பொது செயலாளர் நாயகம் ஜேன் ஹெலியசன் தலைமையில் மதிப்பாய்வு குழுவொன்றை அமைக்கவுள்ளது என இன்டர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது சார்லஸ் பெட்ரி அறிக்கை அல்லது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் ஐ.நா. நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கே மதிப்பாய்வு குழுவை அமைக்கவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்ரிக்கி தெரிவித்துள்ளார்.
சார்லஸ் பெட்ரியின் அறிக்கை ஐ.நா. தலைமையகத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply