ஈரான் நிலநடுக்கத்தில் 5 பேர் பலி: 20 பேர் படுகாயம்

ஈரானின் தெற்கு பகுதி ஆப்கான் எல்லையில் உள்ள சோகன் என்னுமிடத்தில் நேற்று கடுமையான பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு அப்பகுதி வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் குறைந்தது 5 பேர் இறந்து விட்டதாக உடனடியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு 300-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2003-ம் ஆண்டு இங்கு நடந்த பூகம்பத்திற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் பூகம்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஈரானும் ஒன்று.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply