நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு வருடத்தின் இறுதி விடுமுறை காலத்திலும் கூட வேண்டும் என தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்று புதன்கிழமை கூடியது.
டிசெம்பர் 8 ஆம் திகதி நடைபெறும் வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்புடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்தாலும் அதற்கு பின்னர் குறைந்தபட்சம் 10 நாட்களுக்காவது நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆயினும் வரவு செலவு திட்ட விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் உறுப்பினர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்குவது நாடாளுமன்ற பாரம்பரியம். இந்த வருடம் இதற்கு விதிவிலக்காக அமையாது என தெரிவுக்குழுவிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் தெரிவித்தனர்.
எனினும் நாடாளுமன்ற தெரிவுக்குழு டிசெம்பர் 10ஆம், 11ஆம், 12ஆம் திகதிகளிலாவது கூடி பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். என ஆளும் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இதன்போது பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன்னிலையில் மூன்றாவது தடவையாக ஆஜராகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply