இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் – திமுக
தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, குடிபெயரந்து வந்திருக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பிச்சனைகள் ஏற்படுகின்றனன. எனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தவர்களின், அப்பாவிக் குழந்தைகளின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழகத்தில் தங்கி இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அகதிகளாக தங்கியிடுவோரின் பிள்ளைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் ஏற்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக தங்கியிருப்போர் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கின்றன. இதுதொடர்பான ஐ.நா.சபை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாத காரணத்தினால் இங்கு பல ஆண்டுகளாக தங்கியுள்ள அகதிகளுக்கு வசதி வாய்ப்புகள் கிடைக்க முடியாமல் போகிறது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply