சிரிய கிளர்ச்சியில் இதுவரை 40 ஆயிரம் பேர் பலி
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சிக்கு 40 ஆயிரம் பேர் பலியாகி விட்டனர். இதனால் உயிருக்கு பயந்த லட்சக்கணக்கான மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி பக்கத்து நாடான துருக்கியில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதனால் துருக்கி எல்லையோர பகுதியில் சிரியா அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே சிரியாவுக்கு பதிலடி கொடுக்க நேட்டோ மூலம் ஏவுகணைகள் மற்றும் ராணுவ உதவியை அளிக்கும்படி துருக்கி வேண்டுகோள் விடுத்தது.
இதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு 6 பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் 400 வீரர்களை துருக்கிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இதற்கான உத்தரவில் ராணுவ மந்திரி லியான் பெனட்டா கையெழுத்திட்டார். அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படும். இவை நேட்டோ படையின் கண்காணிப்பில் இயக்கப்படும் என தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply