புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக இருவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துகிறது கனடா

தமது நாட்டில் வசிக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்த கனடா நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் பிறந்து கனடாவில் வசித்துவரும் விடுதலை புலி சந்தேகநபர்களான பிரதீபன் நடராஜா, மற்றும் சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடாவின் இத்திட்டத்திற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ள இரு தமிழர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கறுப்புச் சந்தையில் ஆயுதக் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply