எல்லை தாண்டிய மீன் பிடி அரசுக்கள் பிரச்சினையாக உள்ளது
ஒரு நாட்டின் எல்லையை மீறிப்போய் மீன் பிடித்தல், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு கேடாகவும், கடற்றொழில் செய்யும் சமூகத்தினரிடையே பதற்றத்தை தோற்றுவிப்பதாகவும் உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தென்னிந்தியாவிலிருந்து பெருந்தொகையான மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடலில் மீன்பிடிக்க வருவது, இலங்கை – இந்திய அரசாங்கங்கள் எதிர்க்கொள்ள வேண்டிய பிரச்சினையான உள்ளது எனவும் அவர் கூட்டிக்காட்டினார்.
மூன்றாவது காலி சம்பாஷனையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், இன்னும் இந்த பிரச்சினை தொடர்ந்து காணப்படுகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் கடற்றொழிலாளர்களின் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் பெரிதாக உள்ளது. அவர்கள் பல காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறையின் கீழ் இருந்து இப்போதுதான் தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தொடங்கியுள்ளனர்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply