யாழில் உண்ணாவிரதம் ஆரம்பம்
தமிழர் தாயகப்பிரதேசங்களில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட இன அடக்கு முறைகளுக்கும், தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெறும் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்துள்ள தந்நை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4.30 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டிருக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினதும், அப்பாவி பொதுமக்களினதும் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் வலியுறுத்ததும் பொருட்டு உண்ணாவிரம் மேற்கொள்ளப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply