பிரதம நீதியரசர் விவகாரம்: எதிராளிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
பாராளுமன்ற சபாநாயகர், செயலாளர் நாயகம் மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்களை ஜனவரி 3ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.
தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணையை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை சவாலுக்கு உட்படுத்தி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு நியாயமான விசாரணைகளை நடத்தாததால் அக்குழுவிற்கு தடை விதிக்குமாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் தனக்கு இருப்பதாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் தெரிவுக்குழு அங்கத்தவர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply