இந்தியாவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
இந்தியாவில், கும்பலால் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கும், ஐ.நா.சபை கவலை தெரிவித்து உள்ளது. பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமைகளை தடுப்பதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று, இந்தியாவில் உள்ள ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்தார்.
டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பலியான சம்பவத்திற்கு இந்தியாவில் செயல்பட்டுவரும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் இந்த பாதிப்புக்கு உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் குழந்தையாக இருப்பதையும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7200 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பிரதிநிதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply