சிட்னி ரெஸ்ட் போட்டியன்றும் தமிழர்கள் எதிர்ப்பில்

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கட் ரெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள சிட்னி கிரிக்கட் மைதானத்தின் வெளிப்பகுதியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் நாளை (03) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்ற போதும் அதனை விசாரணை செய்ய சுயாதீன பொறிமுறை தேவை என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.

இதனை அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர் சங்கம், ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையுடனான விளையாட்டு சுற்றுலாக்களை எதிர்காலத்தில் நிறுத்தி வைக்குமாறு இந்தப் போராட்டத்தின் போது தாம் கோரவுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர் அமைப்பின் பேச்சாளர் கார்த்தீபன் அருள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் இருந்து தப்பிவரும் தமிழ் அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய நியாயமான கொள்கையை கடைபிடிக்க வேண்டும என்றும் அருள் கோரிக்கை விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply