ஐ. நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு பங்கேற்கிறது. இலங்கைக்குழுவிலுள்ள பலர் ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளதோடு, நேற்று சிலர் அங்கு பயணமானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சின் இரு உயரதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை மறுதினம் ஜெனீவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. 22 ஆவது கூட்டத் தொடரில் சுமார் 80 நாட்டு அமைச்சர்கள் உரையாற்ற உள்ளதோடு இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரை நிகழ்த்துவார். இதேவேளை, அமைச்சர் தலைமையிலான இலங்கைக் குழு மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் வெளிநாட்டுத் தூதுக் குழுக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் கூறின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply