இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்

இல்ங்கையில் இறதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக சர்வதேச சுயாதீன மீளாய்வு விசாரணைகளும் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளத இலங்கையில் தொடர்ந்தும் பொது மக்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். மனித உரிமை காவலர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது என்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.தெற்காசியாவுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக் குழுத் தலைவர் ஜீன் லம்பேர்ட் இது குறித்து தெரிவிக்கையில்,
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தவேண்டும் என்று அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் யோசனை ஒன்றை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொழில்வாய்ப்புக்களையும் சமூக வேலைத் திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

இருந்தபோதும்இ தமிழ் மக்களுக்கு அவர்கள் உரிமையுடன் வாழ்வது தொடர்பில் இன்னும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்டப்போர் தொடர்பில் இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதைப்பற்றி ஐரோப்பிய நாடாளுமன்றம் விசேடமாக விவாதிக்கவில்லை.

ஆனால் பொலிஸ் படை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்தை மாத்திரம் ஐரோப்பிய நாடாளுமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என்று ஜீன் லம்பேர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply