பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர் காயம்

பெங்களூருவில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்போது பெங்களுரூவில் குண்டுவெடித்துள்ளது.கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குவெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காரில் இருந்து வெடிகுண்டு நிகழ்ந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் திடீரென வெடித்து சிதறி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு
நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களுரூ போலீசார் கூறு‌கையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது கார் குண்டு என போலீசார் உறுதியாக தெரிவித்தனர். யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply