நாட்டை சீரழிக்க சில கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்ப்பு : அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.ம.சு.மு. தலைவராக பதவி ஏற்றது முதல், நடைபெற்ற சகல தேர்தல்களிலும் ஐ.ம.சு. வென்றுள்ளது மக்கள் பிரதிநிதிகள் தொகையும் வாக்கு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்ட பின் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எதுவித இன, மத, பேதமின்றி அமைதியான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப ஐ.ம.சு.மு. அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று குறிப்பிட்டிருந்தார். 2009 மே மாதத்திற்குப் பின்னர் எதுவித பயங்கரவாத நடவடிக்கையும் இடம்பெறவில்லை. இனங்களிடை§யெ நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
7 வீத பொருளாதார வளர்ச்சியும் 5 வீதத்திற்கு குறைவான வேலையின்மை யையும் பேணி வருவதோடு வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலா பயணிகளின் வருகை என்பனவும் உயர்ந்துள்ளன. இதனை பொறுக்காத சில எதிர்க்கட்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை பின்நோக்கி நகர்த்தவும் நாட்டில் நாசகார வேலைகளை ஆரம்பிக்கவும் தயாராகின்றன.
பயங்கரவாத த்தை ஒழித்ததற்கு எதிரான சகல சக்திகளும் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றன. ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இந்த சகல சதிகளையும் முறியடித்து வெற்றி கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. சகல இனத்தவர்களுக்கும் தனித்துவமும் உரிமைகளும் இருப்பதை நாம் ஏற்பதோடு இன, மதங்களிடையே பிளவு ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் நிராகரிக்கிறோம்.
எமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும் என்பதை ஆரம்பம் முதல் நிரூபித்து வருகிறோம். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை. அரசாங்கமும் அதற்கு ஒரு போதும் இடமளிக்காது. ஆட்சிக்கு வருவதற்காக சில கட்சிகள் குரோத நோக்குடன் செயற்படுகின்றன. இவை இனங்களிடையே பிளவை ஏற்படுத்தவும் நாட்டின் அபிவிருத்தியை தடுக்கவுமே வழி வகுக்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

நாட்டை பின்நோக்கி நகர்த்தவும் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தவும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சில கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்த சதிகளை ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றி கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
Leave a Reply