இலங்கையில் குப்பி லாம்புகளை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது : பொன்சேகா

ஊழல், மோசடிகளை ஈடுசெய்ய அரசாங்கத்தினால் எடுக்கப்படும் மக்கள் சார்பற்ற தீர்மானங்கள் காரணமாக, மின்சார பாவனையில் இருந்து மக்கள், மீண்டும் குப்பி லாம்புகளை பயன்படுத்தும் யுகத்தை நோக்கி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அத்துல்கோட்டேயில் உள்ள தமது கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின், போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் மின்சார கட்டணங்கள் குறித்தே அதிகம் பேசுகின்றனர். இது மக்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது. மின்சார கட்டணங்கள் நியாயமற்ற வகையில் உயர்த்தப்படும் என்பதை வெளிநாடுகள் கூட கடந்த காலத்தில் உணர்ந்திருந்தன. மின்சார கட்டணத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவருமாறு அமெரிக்க தூதரகம் கூட அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும் அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை மக்களால் தாங்கி கொள்ள முடியாது. அரசாங்கம் அதிகரித்துள்ள மின் கட்டணங்கள் காரணமாக பாதிக்கப்பட போவது குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் சாதாரண மக்களே.

அரசாங்கம் ஒருபுறம் நாட்டின் வளங்களை சுரண்டி சாப்பிடுகிறது. மறுபுறம் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. மக்களின் பணத்தை விரயமாக்கி வருகிறது.

இதனால் ஏற்படும் இழப்புகளை ஏழையின் பாக்கெட்டில் இருந்தே அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply