அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்காவில் உள்ள மாசசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் தேதியன்று பாஸ்டன் மராத்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாசசூசட்ஸ் மற்றும் காம்பிரிட்ஜ் காவல்துறையினர் இந்திய நேரப்படி இன்று அதிகாலை மாசசூசட்ஸ் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒரு காவல்துறை அதிகாரியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியப்படாத நிலையில் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply