பாக்தாத் ஓட்டலில் குண்டு வெடிப்பு: 27 பேர் பலி

ஈராக்கில் நாளை  மாகாண தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரில் உள்ள துபாய் கபே ஓட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள வீடியோ கேம்ஸ் மையத்தில் குண்டு வெடித்தது. இதில் 27 பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி வியாழன் இரவு 10 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.பலியானவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்களும் அடங்குவர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply