கூடங்குளம் அணுஉலையை உடனடியாக மூட வேண்டும்: ராமதாஸ்

கூடங்குளம் அணுஉலையை உடனடியாக மூட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடங்குளம் அணு உலையை அமைப்பதில் நடந்த ஊழல்கள் மற்றும் தரம் குறைந்த பொருள்கள் பயன்படுத்துவது தொடர்பாக ரஷிய ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன; ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அணு உலையை இயங்கச் செய்வதற்கான முயற்சியில் இந்திய அணுசக்தித் துறை செயல்படுகிறது என்றும், கூடங்குளம் அணு உலையில் இருந்து திடீரென எழும் வெடிச்சத்தத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இப்போதுள்ள நிலையில் அணுஉலையில் உற்பத்தியைத் தொடங்குவது என்பது இந்தியாவின் தென் முனையில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் மீது மரணத்தைத் திணிப்பதாகும்” என்ற ராமதாஸ், “முதல் அணு உலையில் உற்பத்தி தொடங்குவதையும், 2-ஆம் அணு உலையின் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், கூடங்குளம் அணுஉலையை தரைவழியாக முற்றுகையிடும் போராட்டத்தை பல்வேறு அமைப்புகள் இன்று நடத்துகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply