இந்தியா – சீனாவுக்கிடையில் எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா, சீனாவுக்குகிடையில் நெருக்கத்தை பேணும் வகையில் இரு நாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சீனப் பிரதமர் மூன்று நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இதன் போதே இருநாட்டு பிரதமர் முன்னிலையில் புதுடில்லியில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த வைபவத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். மானசரோவர் யாத்திரை தொடர்பான ஒப்பந்தம், கடல், பொருள், உணவுப்பொருள் வர்த்தகம், நீர்மேலாண்மை, பாசனத்துறை உள்ளிட்ட 08 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. எல்லையில் பதற்றத்தை தணித்தால் மட்டுமே இரு தரப்பு உறவு சுமுகமாக இருக்கும் என சீனாவிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது லடாக் பிராந்தியத்தில் சீன படைகள் ஊடுருவியதை சீனப் பிரதமரிடம் சுட்டுக்காட்டிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அத்துமீறல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 3 அணைகளை கட்ட சீனா திட்டமிட்டிருப்பது குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான தண்ணீர் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வு காண குழு ஒன்றை அமைக்கவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply