அமெரிக்க சூறாவளிக்கு 91 பேர் பலி
அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி காரணமாக 20 குழந்தைகள் உட்பட 91 பேர் பலியாகியுள்ளனர். இதில் இரண்டு பள்ளிகள் மற்றும் பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர்,
இது ஒரு பேரழிவு இயற்கைச் சீற்றம் என்று பிரகடனம் செய்துள்ள அதிபர் ஒபாமா, மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த டொர்னேடோ மணிக்கு 320 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசியுள்ளது.
கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட சூறாவளிகளில் இது மோசமான சூறாவளி என அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்த சூறாவளியை மோசமான சூறாவளி என அறிவித்துள்ள ஜனாதிபதி ஒபாமா, முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply