இனப்படுகொலை தொடர்பான குவாதெமாலா தலைவர் எதிரான தீர்ப்பு ரத்து
குவாதெமாலா நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் எஃப்ரெய்ன் ரியோஸ் மோன்து இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டு வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோன்து மீது கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதி வாரங்களில் வழங்கப்பட்டிருந்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1980களில் குவாதெமாலாவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் இக்ஸில் மாயா இனக்குழுவை சேர்ந்த சுமார் 1800 பேரைக் கொல்ல உத்தரவிட்டிருந்ததாக இம்மாதத்தில் முன்னதாக மொன்து மீது குற்றங்காணப்பட்டிருந்தது. அவர் மீது 80 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
வழக்கு நடந்த சமயத்தில்இ நீதிபதி பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என மோன்தின் வழக்குரைஞர் சாட அவர் நீதிமன்றத்திற்கு வர சிறிது காலம் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அவர் இல்லாத அந்த காலப்பகுதியில் மோன்துக்கு உரிய சட்ட பிரதிநிதித்தும் கிடைத்திருக்கவில்லை என்றும்இ அப்போது வாக்குமூலம் பதியப்பட்ட சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply