இம்ரான் கான் நலமடைகிறார்!

பாகிஸ்தான் அரசியல்வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் முதுகுத் தண்டுக்கு முட்டுக் கொடுக்கும் பெல்ட் அணிந்தபடி 300 மீட்டர்கள் நடந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு லாகூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காயம் அடைந்த பிறகு இப்போதுதான் அவர் முதல் முறையாக எழுந்து நின்றதுடன் – நடந்தும் சென்றுள்ளார். நாளையே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று இம்ரானின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இம்ரான் முழுமையாக குணமடைவார் என்று தாம் நம்புவதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

பாகிஸ்தான் அரசியலில் ஒரு சிறிய கட்சியாக இருந்த இம்ரானின் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply