இலங்கை தமிழர் நலனில் காங்கிரஸ் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது
இலங்கை தமிழர் நலன்களை உறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனவும் தமிழ் நாட்டிலுள்ள ஏனைய கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன எனவும் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக எதுவும் செய்யாதவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும் விமர்சனங்களைச் செய்கின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மறைவின் 22ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply