ஜெனிவாவில் அமைச்சர் மைத்திரிபாலவிற்கு பலத்த பாதுகாப்பு

ஜெனிவா சென்றுள்ள இலங்கையின் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இவர் பயணிக்க கவச வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார மாநாடுகளில் பங்கேற்கவென மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார்.

உலக சுகாதாரம், ஜி-15, மற்றும் பொதுநலவாய உளச் சுகாதார மாநாடு ஆகியவற்றில் அவர் கலந்து கொள்கிறார்.

தமிழ் ஆதரவாளர்களால் ஜெனிவாவில் மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற அச்சத்தால் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply