இலங்கை மீனவர்கள் 11 பேர் விடுதலை

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட, 11 இலங்கை மீனவர்கள், விசாரணையில் வழி தவறி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து, இலங்கை மீனவர்கள் நேற்று (21) மதியம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  புதுச்சேரி அருகே, 90 கி.மீ., தொலைவில், சில தினங்களுக்கு முன், இரண்டு படகுகளில், 11 இலங்கை மீனவர்கள், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்ததை, கடலோர காவல் படையினர் கண்காணித்தனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்ததாக கருதி, அவர்களை பிடித்த கடலோர காவல் படையினர், மேல் நடவடிக்கைக்காக, துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட, இலங்கை மீனவர்கள் குறித்த விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், இலங்கை மீனவர்கள் வழி தவறி, இந்திய எல்லையில் மீன்பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள், நேற்று மதியம் படகு மூலம், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply