காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் போராட்டம்

காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். காமன்வெல்த் நாடுகளின் 23–வது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் வருகிற 10–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை நடக்கிறது. அதில் இந்தியா பங்கேற்க கூடாது என தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்தும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் லண்டனில் நேற்று மாபெரும் கண்டன பேரணி நடத்தினார்கள்.

இப்பேரணி ‘எம் பேங்க்மெண்ட்’ நிலையம் அருகே இருந்து புறப்பட்டு பிரதமரின் 10 டவுனிங் தெருவில் முடிவடைந்தது.

பேரணியின்போது இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இளவரசர் சார்லஸ் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன.

மேலும் இக்கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் பேரணியில் எடுத்து செல்லப்பட்டன. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்பன போன்ற கண்டன கோஷங்களும் எழுப்பபட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply