இலங்கை போர்க்குற்றத்தை அம்பலப்படுத்திய சேனல்–4 இயக்குனருக்கு இந்தியா ‘விசா’ மறுப்பு
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட போரின்போது இனப்படுகொலைகள் மூலம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவற்றை லண்டனில் இயங்கும் சேனல்–4 டெலிவிஷன் வீடியோ காட்சி மூலம் வெளிஉலகுக்கு அம்பலப்படுத்தியது.தமிழீழ படுகொலைகள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொல்லப்பட்டது முதல் பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா கற்பழித்து படுகொலை செய்யப்பட்டது வரை அனைத்தையும் வீடியோ மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இதற்கிடையே வருகிற 7–ந்தேதி டெல்லியில் ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சேனல்–4 டெலிவிஷன் நிறுவன இயக்குனர் கல்லம் மேக்ரே முடிவு செய்துள்ளார். அதற்காக ‘விசா’வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அவருக்கு ‘விசா’ வழங்காமல் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply